SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

திருமண Bio-data தயாரிப்பு – 100 FormatsMarriage biodata maker – Tamil / English, photo, automatic rasi & navamsam jathagam chart

விவரங்களை type செய்யுங்கள் → design தேர்வு செய்யுங்கள் → A4 PDF / print. ஜாதகக் கட்டம் தானாக கணக்கிடும். 20 basic formats இலவசம் (login தேவையில்லை), 80 Pro formats – ஒரு design-க்கு 10 tokens.

👤
Passport photo (விருப்பம்).
🧍
நின்ற நிலை photo கொடுத்தால் பின்னணி தானாக நீக்கப்பட்டு (AI) bio-data பக்கவாட்டில் வரும். Phone photo போதும் – நல்ல வெளிச்சத்தில், முழு உருவம் தெரியும்படி.

💾 File-ஆக சேமி: பிறகு திருத்த ".sarvin" file-ஆக சேமித்து வையுங்கள் – அந்த file-ஐ இந்த பக்கத்தில் இழுத்து விட்டால் மீண்டும் திருத்தலாம். PDF-ஆக சேமிக்க: Print திரையில் Destination → "Save as PDF". 🔒 விவரங்கள் இந்த browser-ல் மட்டும் (எங்கள் server-க்கு வராது). கடையில் பொது கணினி என்றால் முடிந்ததும் "புதிதாக" அழுத்துங்கள்.

திருமண Bio-data (சுயவிவரம்) எப்படி தயாரிப்பது?

வரன் பார்க்கும்போது முதலில் பரிமாறப்படுவது bio-data. பெயர், பிறந்த தேதி & நேரம், ராசி, நட்சத்திரம், கல்வி, வேலை, குடும்ப விவரம், ஜாதகக் கட்டம் – இவை தெளிவாக ஒரே பக்கத்தில் இருந்தால் இரு குடும்பத்தினருக்கும் பார்க்க எளிது. இந்த tool-ல் ஒருமுறை விவரங்களை type செய்தால் 100 design-களில் எதையும் தேர்வு செய்து, தமிழ், English அல்லது இரண்டு மொழிகளிலும் A4 PDF எடுக்கலாம். WhatsApp-ல் PDF அனுப்பலாம் அல்லது கடையில் color print எடுக்கலாம்.

In English: Fill in personal details, horoscope details (rasi, nakshatram, lagnam, dasa balance), the rasi and navamsam charts, family details, contact and partner expectations. Choose Tamil, English or both for the labels, pick one of 100 designs (20 different layouts × 5 colours) and download a PDF or print. Add a standing (full-length) photo and its background is removed automatically. The Traditional, Simple, Classic Table and Minimal layouts are free; the others cost 10 tokens per design.

Bio-data-வில் இருக்க வேண்டியவை

  1. சுய விவரம்: பெயர், பிறந்த தேதி, நேரம், இடம், உயரம், நிறம், கல்வி, வேலை, மாத வருமானம்.
  2. ஜாதக விவரம்: ராசி, நட்சத்திரம் & பாதம், லக்னம், தசா இருப்பு, கோத்திரம் / குலதெய்வம்.
  3. ராசி & நவாம்சம் கட்டம்: ஜாதகத்தில் உள்ளபடியே ஒவ்வொரு கட்டத்திலும் கிரகங்களை எழுதுங்கள் (சூ, சந், செ, பு, கு, சு, சனி, ரா, கே, ல).
  4. குடும்ப விவரம்: தந்தை, தாய் பெயர் & தொழில், சகோதர சகோதரிகள் (திருமணம் ஆனவர்/ஆகாதவர்), சொத்து விவரம்.
  5. தொடர்புக்கு: முகவரி, கைபேசி எண். எதிர்பார்ப்பு – வரனிடம் எதிர்பார்ப்பவை (விருப்பம்).

கேள்வி – பதில்

இலவசமா?

ஆம் – Traditional, Simple, Classic Table, Minimal ஆகிய 4 layout-கள் 5 நிறங்களிலும் (20 designs) இலவசம், login தேவையில்லை. மற்ற 80 Pro design-களுக்கு ஒரு design-க்கு 10 tokens (₹10); அதே நாளில் திருத்தி மீண்டும் print செய்யலாம்.

ஜாதகக் கட்டம் தானாக வருமா?

ஆம். பிறந்த தேதி, நேரம், ஊர் கொடுத்து "⚙ கணக்கிடு" அழுத்தினால் ராசி & நவாம்சம் கட்டம் (வக்ர கிரகங்கள் "(வ)" குறியுடன்), ராசி, நட்சத்திரம், பாதம், லக்னம், தசா இருப்பு தானாக நிரம்பும். இது திருக்கணித (லஹிரி அயனாம்சம்) முறை – வாக்கிய பஞ்சாங்கத்தில் கணித்த ஜாதகத்துடன் சில நேரம் ஒரு கிரகம் அடுத்த கட்டத்தில் இருக்கலாம். ஜோதிடர் எழுதிய ஜாதகம் இருந்தால் அதனுடன் ஒப்பிட்டு, வேண்டுமானால் கட்டத்தில் நேரடியாக திருத்தலாம்.

ஜாதகக் கட்டம் கையால் எப்படி நிரப்புவது?

ஜாதகத்தில் உள்ள தென்னிந்திய கட்டம் போலவே இடது மேல் மூலை மீனம், அடுத்து மேஷம், ரிஷபம், மிதுனம் என கடிகார திசையில் வரும். ஒவ்வொரு கட்டத்திலும் அந்த ராசியில் உள்ள கிரகங்களை எழுதுங்கள். கீழே உள்ள சுருக்கங்களை click செய்தாலும் கடைசியாக click செய்த கட்டத்தில் சேரும்.

முழு உருவ (standing) photo எப்படி?

"🧍 முழு உருவ photo" அழுத்தி நின்ற நிலையில் எடுத்த photo-வை கொடுங்கள். உங்கள் browser-லேயே (AI) பின்னணி நீக்கப்பட்டு, நபர் மட்டும் bio-data-வின் பக்கவாட்டில் அழகாக வரும் – photo எங்கள் server-க்கு அனுப்பப்படுவதில்லை. நல்ல வெளிச்சம், தெளிவான பின்னணி இருந்தால் முடிவு சிறப்பாக இருக்கும்.

English-ல் மட்டும் வேண்டுமா?

"லேபிள் மொழி" என்பதில் English தேர்வு செய்யுங்கள். பெயர்கள் / விவரங்களையும் English-ல் type செய்யுங்கள். இரண்டும் என்றால் "தமிழ் / English" லேபிள்கள் வரும்.

விவரங்கள் சேமிக்கப்படுமா?

உங்கள் browser-ல் மட்டும். எங்கள் server-க்கு அனுப்பப்படுவதில்லை. பொது கணினியில் "புதிதாக" அழுத்தி அழித்துவிடுங்கள்.

மற்ற tools: Resume Maker (108 formats) · Photo Print 4×6 · Aadhaar / ID Print

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery
Bio-data-வை print செய்ய பக்கத்தில் உள்ள "Download PDF / Print" button-ஐ அழுத்துங்கள்.