SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

Resume Maker – 108 Resume Formatsரெஸ்யூம் தயாரிப்பு – Fresher, Experienced, Govt / Private job formats with photo

விவரங்களை type செய்யுங்கள் → design தேர்வு செய்யுங்கள் → A4 PDF download / print. 27 basic formats இலவசம் (login தேவையில்லை), 81 Pro formats – ஒரு design-க்கு 10 tokens.

👤
Passport size photo (விருப்பம்). Photo இல்லாத design-களில் காட்டப்படாது.

💾 File-ஆக சேமி: பிறகு திருத்த ".sarvin" file-ஆக சேமித்து வையுங்கள் – அந்த file-ஐ இந்த பக்கத்தில் இழுத்து விட்டால் (drag & drop) மீண்டும் திருத்தலாம். PDF-ஆக சேமிக்க: Print திரையில் Destination → "Save as PDF" தேர்வு செய்யுங்கள். 🔒 உங்கள் விவரங்கள் இந்த browser-ல் மட்டும் (எங்கள் server-க்கு வராது). கடையில் பொது கணினி என்றால் முடிந்ததும் "புதிதாக" அழுத்துங்கள்.

Resume எப்படி தயாரிப்பது? (How to make a resume)

வேலைக்கு விண்ணப்பிக்கும்போது முதலில் பார்க்கப்படுவது உங்கள் resume. நிறுவனங்கள் ஒரு resume-ஐ சராசரியாக சில விநாடிகள் மட்டுமே பார்க்கின்றன – அதனால் சுருக்கமாக, சரியான வரிசையில், பிழையில்லாமல் இருக்க வேண்டும். இந்த tool-ல் விவரங்களை ஒருமுறை type செய்தால், 108 வகையான design-களில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து A4 PDF-ஆக எடுக்கலாம். Design மாற்றினாலும் விவரங்கள் மீண்டும் type செய்ய வேண்டியதில்லை.

In English: Type your details once – personal details, career objective, education, experience, skills, languages, certificates and declaration – then pick any of 108 designs (36 different layouts × 3 colours each). The A4 preview updates as you type. 9 basic layouts (Classic, Classic + Photo, Indian / Govt, Simple, Fresher, Office, Minimal, Two Column, Label Column – 27 designs) are free with no login; Pro formats cost 10 tokens per design and can be printed again the same day.

Resume-ல் இருக்க வேண்டிய பகுதிகள்

  1. பெயர் & தொடர்பு: முழு பெயர், கைபேசி எண், email, ஊர். புகைப்படம் அரசு / தனியார் நிறுவனங்களில் பொதுவாக கேட்கப்படும் – IT நிறுவனங்களுக்கு கட்டாயமில்லை.
  2. Career objective: 2–3 வரிகளில் நீங்கள் எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்கள், உங்கள் பலம் என்ன.
  3. கல்வித் தகுதி: சமீபத்திய படிப்பு முதலில் – படிப்பு, கல்லூரி / பள்ளி, பல்கலைக்கழகம் / வாரியம், ஆண்டு, மதிப்பெண் %.
  4. பணி அனுபவம்: பதவி, நிறுவனம், காலம், செய்த வேலைகள் (ஒவ்வொன்றும் ஒரு வரி). Fresher என்றால் internship / project எழுதலாம்.
  5. திறன்கள்: Tally, MS Office, தட்டச்சு, Driving, மொழிகள் போன்றவை.
  6. சுய விவரம் & உறுதிமொழி: பிறந்த தேதி, தந்தை பெயர், இடம், தேதி, கையொப்பம் – இந்திய format-ல் வழக்கம்.

Fresher resume tips

கேள்வி – பதில்

இது உண்மையிலேயே இலவசமா?

ஆம். Classic, Classic + Photo, Indian / Govt, Simple, Fresher, Office, Minimal, Two Column, Label Column ஆகிய 9 layout-கள் (27 designs) இலவசம் – login தேவையில்லை. மற்ற 81 Pro design-களுக்கு ஒரு design-க்கு 10 tokens (₹10). கட்டணம் செலுத்திய design-ஐ அதே நாளில் திருத்தி மீண்டும் print செய்யலாம்.

பின்னர் திருத்த எப்படி சேமிப்பது?

"💾 File-ஆக சேமி" அழுத்தினால் ".sarvin" என்ற சிறிய file கிடைக்கும் (photo-வுடன்). பின்னர் திருத்த வேண்டுமானால் அந்த file-ஐ இந்த பக்கத்தில் இழுத்து விடுங்கள் (drag & drop) அல்லது "📂 File திற" அழுத்துங்கள் – எல்லா விவரங்களும், தேர்வு செய்த design-உம் திரும்ப வரும்.

PDF எப்படி கிடைக்கும்?

"Download PDF / Print" அழுத்தினால் print திரை வரும். அதில் Destination / Printer-ல் "Save as PDF" தேர்வு செய்து Save அழுத்துங்கள். கைபேசியில் "Download PDF" / "Save as PDF" என்று வரும். நேரடியாக printer-க்கும் அனுப்பலாம்.

என் விவரங்கள் எங்கே சேமிக்கப்படுகின்றன?

உங்கள் browser-ல் மட்டும் (அடுத்த முறை திறந்தாலும் இருக்கும்). எங்கள் server-க்கு அனுப்பப்படுவதில்லை. பொது கணினியில் பயன்படுத்தினால் "புதிதாக" அழுத்தி அழித்துவிடுங்கள்.

தமிழில் resume எழுதலாமா?

ஆம் – எந்த பெட்டியிலும் தமிழில் type செய்யலாம். பெரும்பாலான நிறுவனங்கள் English resume எதிர்பார்க்கும்; அரசு / உள்ளூர் வேலைகளுக்கு தமிழும் ஏற்றது.

2 பக்கம் வந்தால்?

விவரங்கள் அதிகமானால் தானாக இரண்டாம் பக்கத்துக்கு செல்லும். ஒரு பக்கத்தில் முடிக்க "Compact" design-ஐ தேர்வு செய்யுங்கள் அல்லது விவரங்களை சுருக்குங்கள்.

மற்ற tools: திருமண Bio-data Maker · TNPSC Photo Editor · Passport / 4×6 Photo Print · TNeGA Upload Tools

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery
Resume-ஐ print செய்ய பக்கத்தில் உள்ள "Download PDF / Print" button-ஐ அழுத்துங்கள்.