PSTM என்றால் என்ன? PSTM meaning in Tamil
PSTM = Persons Studied in Tamil Medium – தமிழ் வழியில் படித்தவர்கள். தமிழ்நாடு அரசு பணிகளில் (TNPSC, TRB, TNUSRB, MRB) PSTM சட்டத்தின் கீழ் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% முன்னுரிமை உண்டு. இதற்கு பாடங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் கற்பிக்கப்பட்டிருக்க வேண்டும் – தமிழை ஒரு பாடமாக மட்டும் படித்தது போதாது. பள்ளியில் ஆங்கில வழியில் படித்து, உயர் கல்வியில் மட்டும் தமிழ் வழி என்றால் பலன் கிடைக்காது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
PSTM சான்றிதழ் (தமிழ் வழி கல்வி சான்றிதழ்) நீங்கள் படித்த பள்ளி / கல்லூரியின் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் வழங்குவார் – அதில் நீங்கள் படித்த கல்வியாண்டுகள் (from – to) இருக்கும். அந்த ஆண்டுகளை சரியாக கணக்கிட கீழே உள்ள விளக்கமும் மேலே உள்ள tool-ம் உதவும். ஆவணப் பட்டியல்: தமிழ் வழி கல்வி சான்றிதழ் – தேவையான ஆவணங்கள்.
PSTM ஆண்டு கணக்கீடு எப்படி வேலை செய்கிறது?
PSTM (Persons Studied in Tamil Medium) சான்றிதழ் அல்லது தமிழ் வழியில் படித்ததற்கான சான்று கேட்கும்போது, 1-ஆம் வகுப்பு முதல் ஒவ்வொரு வகுப்பையும் எந்த கல்வியாண்டில் படித்தீர்கள் என்று குறிப்பிட வேண்டியிருக்கும். பல வருடங்களுக்கு முன் படித்ததால் இதை நினைவுபடுத்துவது கடினம். 10-ஆம் வகுப்பு சான்றிதழில் உள்ள ஆண்டை வைத்து பின்னோக்கி கணக்கிட்டால் எல்லா ஆண்டுகளும் கிடைக்கும் – இந்த tool அதைத்தான் செய்கிறது.
கணக்கீடு: 10-ஆம் வகுப்பு தேர்வு ஆண்டு 2024 என்றால், 10-ஆம் வகுப்பு கல்வியாண்டு 2023 – 2024. ஒவ்வொரு முந்தைய வகுப்பும் ஒரு வருடம் முன்பு: 9-ஆம் வகுப்பு 2022 – 2023 … 1-ஆம் வகுப்பு 2014 – 2015. 11-ஆம் வகுப்பு 2024 – 2025, 12-ஆம் வகுப்பு 2025 – 2026.
பயன்படுத்தும் முறை
- 10-ஆம் வகுப்பு சான்றிதழில் உள்ள தேர்வு ஆண்டை உள்ளிடுங்கள்.
- 12-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் "12-ஆம் வகுப்பு" தேர்வு செய்யுங்கள்; இல்லையெனில் "10-ஆம் வகுப்பு".
- மாணவர், தந்தை, தாய் பெயர்களை தமிழ் மற்றும் English-ல், கைபேசி எண்ணுடன் உள்ளிடுங்கள் (விருப்பம்).
- வலப்பக்கம் வரும் அட்டவணையை சரிபார்த்து Print அல்லது Copy அழுத்துங்கள்.
கேள்வி – பதில்
PSTM என்றால் என்ன? (PSTM meaning in Tamil)
PSTM = Persons Studied in Tamil Medium – தமிழ் வழியில் படித்தவர்கள். பாடங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் கற்பிக்கப்பட்டிருக்க வேண்டும்; தமிழை ஒரு பாடமாக மட்டும் படித்தது PSTM ஆகாது. தமிழ்நாடு அரசு பணிகளில் PSTM சட்டத்தின் கீழ் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை (20%) உண்டு.
"Do you claim PSTM for this qualification?" என்றால் என்ன?
TNPSC போன்ற விண்ணப்பங்களில் வரும் இந்த கேள்வியின் பொருள்: "இந்த கல்வித் தகுதியை (உதா: 10, 12, பட்டம்) தமிழ் வழியில் படித்தீர்களா, அதற்கு PSTM முன்னுரிமை கோருகிறீர்களா?". உண்மையில் தமிழ் வழியில் படித்து, அதற்கான PSTM சான்றிதழ் இருந்தால் மட்டும் Yes கொடுங்கள்.
PSTM சான்றிதழ் யார் தருவார்கள்?
நீங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் / கல்லூரி முதல்வர் வழங்குவார். ஒவ்வொரு பள்ளி / கல்லூரிக்கும் தனி சான்றிதழ், படித்த கல்வியாண்டுகளுடன் (from – to). பள்ளி மூடப்பட்டிருந்தால் மாவட்ட கல்வி அலுவலரை அணுகுங்கள்.
PSTM சான்றிதழுக்கு என்ன ஆவணங்கள் வேண்டும்?
பொதுவாக TC, மதிப்பெண் சான்றிதழ், அந்த பள்ளியில் படித்த ஆண்டுகள் விவரம். ஆண்டுகளை இந்த பக்கத்தின் கணக்கீட்டில் சரிபார்த்து எடுத்துச் செல்லுங்கள். முழு பட்டியல்: தமிழ் வழி கல்வி சான்றிதழ் – ஆவணங்கள் பக்கம்.
ஒரு வகுப்பில் மீண்டும் படித்திருந்தால் (repeat)?
இந்த tool ஒவ்வொரு வகுப்பையும் ஒரு வருடம் என கணக்கிடுகிறது. ஏதேனும் வகுப்பில் மீண்டும் படித்திருந்தால், அந்த வகுப்புக்கு முந்தைய வகுப்புகளின் ஆண்டுகள் ஒரு வருடம் முன்னே செல்லும் – பள்ளி மாற்று சான்றிதழ் (TC) / பதிவேட்டில் உள்ள ஆண்டுகளுடன் ஒப்பிட்டு சரி செய்யுங்கள்.
10-ஆம் வகுப்பு supplementary / மறுதேர்வில் தேர்ச்சி என்றால்?
அப்போது சான்றிதழில் உள்ள ஆண்டு, 10-ஆம் வகுப்பு படித்த கல்வியாண்டுடன் பொருந்தாமல் இருக்கலாம். பள்ளி பதிவேடு / TC-ல் உள்ள ஆண்டை உறுதி செய்து, அதன்படி ஆண்டை உள்ளிடுங்கள்.
இந்த அட்டவணையே சான்றிதழா?
இல்லை. இது விண்ணப்பம் நிரப்ப உதவும் கணக்கீடு மட்டுமே. PSTM சான்றிதழ் பள்ளி / கல்வித் துறை அதிகாரிகளால் வழங்கப்படுவது.
என் விவரங்கள் சேமிக்கப்படுமா?
இல்லை. எல்லா கணக்கீடும் உங்கள் browser-லேயே நடக்கிறது. "புதிதாக" அழுத்தினால் எல்லாம் அழிக்கப்படும்.
📘 முழு வழிகாட்டி: PSTM சான்றிதழ் பெறுவது எப்படி
மற்ற tools: TNeGA Upload Tools · TNPSC Photo Editor · இ-சேவை upload வழிகாட்டி