சாதிச் சான்றிதழ் – விண்ணப்பிப்பது எப்படி?
- தேவையான ஆவணங்களின் அசல் மற்றும் தெளிவான நகல் / scan-ஐ தயார் செய்யுங்கள்.
- அருகிலுள்ள இ-சேவை மையத்தில் அல்லது tnedistrict.tn.gov.in மூலம் (CAN எண் பதிவுடன்) விண்ணப்பியுங்கள்.
- கட்டணம் செலுத்தி acknowledgement (விண்ணப்ப எண்) பெறுங்கள் – அதை பத்திரமாக வைத்திருங்கள்.
- VAO / வருவாய் ஆய்வாளர் விசாரணை – அழைத்தால் ஆவணங்களுடன் செல்லுங்கள்.
- அங்கீகரிக்கப்பட்டதும் SMS வரும்; இ-சேவை மையத்தில் / online-ல் சான்றிதழை download / print செய்யலாம்.
குறிப்பு: குடும்பத்தில் யாருக்கும் சாதிச் சான்றிதழ் இல்லையென்றால் VAO விசாரணை கூடுதல் நேரம் எடுக்கலாம்; உறவினரின் சான்றிதழ் இருந்தால் இணைத்துவிடுங்கள்.
கேள்வி – பதில்
பழைய கைப்பட எழுதிய சான்றிதழ் இருக்கிறதே, புதிதாக வேண்டுமா?
பல இடங்களில் இப்போது online (QR / digital sign) சான்றிதழ் கேட்கிறார்கள். பழைய சான்றிதழை இணைத்து e-Sevai-ல் புதிதாக விண்ணப்பிக்கலாம்.
குழந்தைக்கு எப்போது எடுக்கலாம்?
பள்ளி சேர்க்கையின் போதே எடுக்கலாம். பெற்றோரின் சான்றிதழ் இருந்தால் எளிது.
இந்த விவரங்கள் எப்போதும் சரியா?
விதிமுறைகள், கட்டணம், தேவையான ஆவணங்கள் அவ்வப்போது மாறலாம்; அலுவலர் கூடுதல் ஆவணம் கேட்கலாம். விண்ணப்பிக்கும் முன் இ-சேவை மையத்தில் உறுதிப்படுத்துங்கள்.
தொடர்புடையவை: வருவாய் சான்றிதழ்கள் வழிகாட்டி · வயது கணக்கீடு · PDF அளவு குறைக்க · இ-சேவை upload tools