Compress PDF to 200 KB, 100 KB, 500 KB Online Free
அரசு இணையதளங்களில் "File size should be less than 200 KB" என்று வந்தால் இந்த tool போதும். நீங்கள் கொடுக்கும் அதிகபட்ச KB-க்குள் PDF-ஐ சுருக்கும். Scan செய்த சான்றிதழ், Aadhaar, வங்கி passbook, மதிப்பெண் சான்றிதழ் போன்ற PDF-களை இ-சேவை, TNPSC, உதவித்தொகை (scholarship), வங்கி KYC portal-களுக்கு ஏற்ற அளவில் மாற்றலாம்.
எதற்கெல்லாம் பயன்படும்?
- இ-சேவை / TNeGA: PDF 200 KB-க்குள்
- TNPSC, TRB, MRB சான்றிதழ் upload: 200 KB / 500 KB
- Scholarship, கல்லூரி சேர்க்கை: 100 KB
- Email / WhatsApp-ல் அனுப்ப சிறிய PDF
PDF அளவை குறை – எப்படி பயன்படுத்துவது?
- மேலே உள்ள "File தேர்வு செய்" அழுத்துங்கள் அல்லது file-ஐ இழுத்து விடுங்கள் (ZIP-ம் போடலாம்).
- தேவையான விருப்பங்களை தேர்வு செய்யுங்கள்.
- பச்சை button-ஐ அழுத்துங்கள் – சில விநாடிகளில் புதிய file தயார்.
- "⬇ Download" அழுத்தி சேமியுங்கள். பல files என்றால் "எல்லாம் ZIP-ஆக".
குறிப்பு: "அதிகபட்சம் KB" கொடுத்தால் அந்த அளவுக்குள் வர முயற்சிக்கும்.
கேள்வி – பதில்
PDF-ஐ 100 KB-க்கு குறைக்க முடியுமா?
ஆம். "அதிகபட்சம் KB" பெட்டியில் 100 கொடுங்கள். பக்கங்கள் அதிகம் உள்ள scan PDF என்றால் தெளிவு சற்று குறையலாம் – அப்போது தேவையில்லாத பக்கங்களை முதலில் "Remove PDF Pages"-ல் நீக்குங்கள்.
Compress செய்தால் எழுத்து மங்குமா?
அளவு குறைய குறைய தெளிவு குறையும். 200 KB போன்ற சாதாரண வரம்புகளில் படிக்கக்கூடிய தெளிவு இருக்கும். முடிவை download செய்து ஒரு முறை திறந்து பாருங்கள்.
என் file எங்காவது upload ஆகுமா?
இல்லை. இந்த tool உங்கள் browser-லேயே (கணினி / கைபேசி) வேலை செய்கிறது. Aadhaar, சான்றிதழ் போன்ற தனிப்பட்ட ஆவணங்களுக்கும் பாதுகாப்பானது. பக்கத்தை மூடினால் எல்லாம் அழிந்துவிடும்.
கட்டணம் உண்டா?
இல்லை – முழுவதும் இலவசம், login தேவையில்லை, watermark இல்லை.
கைபேசியில் பயன்படுத்தலாமா?
ஆம். Chrome-ல் சிறப்பாக வேலை செய்யும். பெரிய PDF-களுக்கு (100+ பக்கம்) கணினி வேகமாக இருக்கும்.
ZIP file-ஐ நேரடியாக போடலாமா?
ஆம் – WhatsApp-ல் வந்த ZIP-ஐ போட்டால் உள்ளே உள்ள photo / PDF-கள் தானாக திறக்கும்.
மேலும்: எல்லா PDF & Image tools · TNeGA Upload Tools · TNPSC Photo Editor · இ-சேவை upload அளவுகள்