SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

முகப்பு › வழிகாட்டிகள் › TNPSC புகைப்படம் & கையொப்பம்

TNPSC புகைப்படம் & கையொப்பம் – விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருக்கTNPSC photo and signature: size, name and date, and a final checklist

✍ SARVIN XEROX (Kaviyarasan Vaithiyanathan), L N Puram · புதுப்பிக்கப்பட்டது / Updated: 20-10-2026

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது பலரின் விண்ணப்பம் புகைப்படம், கையொப்பம் காரணமாகவே சிக்கலாகிறது – அளவு தவறு, பெயர் / தேதி இல்லாதது, மங்கலான கையொப்பம். எங்கள் கடைக்கு தேர்வு காலங்களில் தினமும் வரும் விண்ணப்பதாரர்களுக்கு நாங்கள் சரிபார்க்கும் விஷயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

In short (English): For TNPSC applications we prepare the photograph as a recent, front-facing colour photo on a light background, 20–50 KB JPG, and — when the notification asks for it — with the candidate's name and the date of the photograph printed below. The signature is done in black or blue ink on plain white paper, cropped tight and saved as a 10–20 KB JPG. The One Time Registration (OTR) photo may not need the name strip. Always check the instructions in the current TNPSC notification, because sizes and rules can change.

1. புகைப்படம் – சரிபார்க்க வேண்டியவை

2. கையொப்பம் – சரிபார்க்க வேண்டியவை

3. OTR புகைப்படமும் தேர்வு புகைப்படமும்

TNPSC One Time Registration (OTR) கணக்கில் வைக்கும் புகைப்படமும், ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கு கேட்கப்படும் புகைப்படமும் சில நேரங்களில் வேறுபடலாம் – உதாரணமாக, தேர்வு அறிவிப்பு பெயர் & தேதியுடன் கூடிய புகைப்படம் கேட்கலாம். எங்கள் tool-ல் Exam Photo (பெயர் + தேதி) மற்றும் OTR Photo (பெயர் / தேதி இல்லாமல்) என இரண்டு வகையும் உள்ளன.

4. ஏற்கனவே பெயர், தேதி உள்ள புகைப்படம்; தேதி மட்டும் மாற்ற வேண்டுமா?

முன்பு எடுத்த புகைப்படத்தில் பழைய தேதி இருந்து, அறிவிப்பு சமீபத்திய தேதியைக் கேட்டால், புகைப்படத்தை மீண்டும் எடுப்பதே சிறந்தது. ஏற்கனவே சரியான புகைப்படம் இருந்து தேதி பகுதியை மட்டும் புதுப்பிக்க வேண்டுமெனில் எங்கள் தேதி மாற்ற tool-ஐ பயன்படுத்தலாம்.

5. விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முன் இறுதி சரிபார்ப்பு

  1. புகைப்படம், கையொப்பம் preview-ல் சரியாக தெரிகிறதா?
  2. பெயர் எழுத்துக்கூட்டல் SSLC சான்றிதழில் உள்ளபடியே உள்ளதா?
  3. தேதி வடிவம் (DD.MM.YYYY) சரியா?
  4. Upload ஆன பிறகு portal-ல் காட்டப்படும் புகைப்படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு சமர்ப்பியுங்கள்.
📷 இலவசமாக, உங்கள் கைபேசியிலேயே:TNPSC Photo & Signature Editorதேதி மாற்றம்

கேள்வி – பதில்

Mobile-ல் எடுத்த selfie பயன்படுத்தலாமா?

முகம் நேராக, போதுமான வெளிச்சத்தில், பின்னணி சுத்தமாக இருந்தால் பயன்படுத்தலாம். Selfie camera சில நேரம் முகத்தை நீட்டி காட்டும்; பின் camera-வில் வேறொருவர் எடுப்பது சிறந்தது.

Studio புகைப்படம் தேவையா?

கட்டாயமில்லை. மேலே உள்ள விதிகளைப் பின்பற்றினால் வீட்டில் எடுத்த புகைப்படத்தையும் எங்கள் tool சரியான அளவுக்கு மாற்றும்.

என் புகைப்படம் எங்காவது சேமிக்கப்படுமா?

இல்லை. புகைப்படம் உங்கள் browser-லேயே செயலாக்கப்படுகிறது; எங்கள் server-க்கு அனுப்பப்படுவதில்லை.

⚠ அளவுகள், விதிகள் ஒவ்வொரு அறிவிப்பிலும் மாறலாம். விண்ணப்பிக்கும் முன் அந்த தேர்வுக்கான TNPSC அறிவிப்பில் உள்ள "Instructions to Candidates" பகுதியை படியுங்கள்.

அதிகாரப்பூர்வ தகவல்: TNPSC – அதிகாரப்பூர்வ இணையதளம் · TNPSC Online Application.

மற்ற வழிகாட்டிகள்: மின் இணைப்பு பெயர் மாற்றம் · இ-சேவை upload: Photo 50 KB, PDF 200 KB · PSTM சான்றிதழ் · பட்டா மாற்றம் · சாதி, வருமான, இருப்பிட சான்றிதழ் · புதிய மின் இணைப்பு · முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு (CMCHIS) அட்டை · எல்லாம் →
SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery