EB கட்டணங்கள் எப்படி கணக்கிடப்படுகின்றன?
புதிய இணைப்பு: விண்ணப்பக் கட்டணம் (registration ₹220), service connection கட்டணம் (single phase ₹1,105, three phase ₹1,660), development charge (single phase – ஒரு இணைப்புக்கு; three phase – ஒவ்வொரு kW-க்கும்), security deposit (single phase ₹330; three phase kW-க்கு ₹995), meter caution deposit (static / smart) – இவற்றின் கூட்டுத்தொகை.
Load கூட்டுதல்: three phase-ல் கூடுதல் kW-க்கு மட்டும் development charge, security deposit. Single phase-லிருந்து three phase-க்கு மாறும்போது three phase service connection, meter deposit, புதிய மொத்த kW-க்கான கட்டணங்கள் வரும்.
மாத bill: வீடு அல்லாத tariff-களுக்கு fixed charge (kW × விகிதம், மாதத்துக்கு) + units × விகிதம். வணிகம் (Tariff V): 2 மாதத்தில் 100 units-க்குள் என்றால் ₹6.65, அதற்கு மேல் என்றால் எல்லா units-க்கும் ₹10.45. வீட்டு இணைப்புக்கு அரசு மானியம், இலவச units சேர்த்து வீட்டு மின் கட்டண கணக்கீடு-ம் பாருங்கள்.
கேள்வி – பதில்
3 kW three phase புதிய வீட்டு இணைப்புக்கு எவ்வளவு?
Overhead line, static meter என்றால் சுமார்: Registration ₹220 + Service connection ₹1,660 + Development ₹2,215×3 + Security deposit ₹995×3 + Meter deposit ₹2,215 = ₹13,725. Underground அல்லது smart meter என்றால் அதிகம்.
Single phase-லிருந்து three phase-க்கு மாற என்ன கட்டணம்?
Three phase service connection, three phase meter deposit, புதிய மொத்த kW-க்கான development charge மற்றும் security deposit வரும். ஏற்கனவே செலுத்திய single phase தொகை சில நேரம் கழிக்கப்படும் – section office estimate-ஐ பாருங்கள்.
Tariff மாற்ற (வீடு → கடை) கட்டணம் எவ்வளவு?
விண்ணப்பக் கட்டணம் (registration) ₹220. Security deposit விகிதம் எல்லா LT tariff-க்கும் ஒன்றே என்பதால் load மாறாவிட்டால் பொதுவாக கூடுதல் deposit இல்லை; ஆனால் மாத bill புதிய tariff விகிதப்படி வரும்.
இந்த விகிதங்கள் எப்போது மாறும்?
TNERC ஒவ்வொரு ஜூலையிலும் பணவீக்கத்தைப் பொறுத்து (அதிகபட்சம் 6%) மாற்றலாம். இந்த tool TNERC Order No. 6 & 7 of 2025 (1-7-2025 முதல்) விகிதங்களைப் பயன்படுத்துகிறது.
தொடர்புடையவை: EB படிவங்கள் & கடிதங்கள் · Load change கடிதம் · Tariff மாற்ற கடிதம் · புதிய மின் இணைப்பு வழிகாட்டி · TNPDCL