SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

முகப்பு › வழிகாட்டிகள் › PSTM Apply Online

PSTM சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? – படிப்படியாகPSTM certificate apply online 2026 – step-by-step guide (TN Schools e-Sevai)

📝 நேரமில்லையா? வீட்டிலிருந்தே SSLC / HSC photo அனுப்புங்கள் – பள்ளிக்கு ₹60-க்கு நாங்களே apply செய்து, acknowledgement-ஐ WhatsApp-ல் அனுப்புகிறோம் →

✍ SARVIN XEROX (Kaviyarasan Vaithiyanathan), L N Puram · நாங்கள் தினமும் PSTM விண்ணப்பங்கள் செய்யும் இ-சேவை மையம் · புதுப்பிக்கப்பட்டது / Updated: 29-10-2026

TNPSC, TRB, TNUSRB தேர்வுகளில் PSTM முன்னுரிமை கோர, நீங்கள் படித்த ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தமிழ் வழிக் கல்வி (PSTM) சான்றிதழ் வேண்டும். இப்போது இதை பள்ளிக் கல்வித் துறையின் e-Sevai portal-ல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எங்கள் மையத்தில் தினமும் செய்யும் அனுபவத்தை வைத்து, ஒவ்வொரு படியையும் கீழே விளக்கியுள்ளோம்.

In short (English): Apply on the Tamil Nadu School Education e-Sevai portal (esevai.tnschools.gov.in) under “Application for PSTM”. One application covers one school, so apply separately for each school you studied in. Keep your SSLC (and HSC, if your classes go up to 11/12) mark sheet ready as a single PDF or JPG under 1 MB, choose the academic years and classes, district, block, school type and school, pay the fee, and save the Application Reference Number. After the school/officer approves, download the certificate from the portal.

விண்ணப்பிக்கும் முன் தயார் செய்ய வேண்டியவை

படிப்படியாக விண்ணப்பம்

  1. Portal-ஐத் திறந்து login செய்யுங்கள்esevai.tnschools.gov.in-ல் portal கேட்கும் முறையில் (mobile / login) உள் நுழையுங்கள். சேவைகள் பட்டியலில் “Application for PSTM” தேர்வு செய்யுங்கள்.
  2. விண்ணப்பதாரர் விவரங்கள்பெயர், தந்தை பெயர், தாய் பெயர் (ஆங்கிலம் + தமிழ்), பிறந்த தேதி, mobile எண், EMIS எண். SSLC-ல் உள்ள எழுத்துக்கூட்டலிலிருந்து மாறக்கூடாது.
  3. கல்வியாண்டு, வகுப்பு“Academic Year From / To”, “Class From / To” – இந்தப் பள்ளியில் மட்டும் படித்தவை. உதா: 1 முதல் 5 வகுப்பு என்றால் From 2006-2007, To 2010-2011.
  4. பள்ளியைத் தேர்வு செய்யுங்கள்District → Block → School Type → School. பள்ளி பெயர்கள் சுருக்கமாக இருக்கும் (PUPS = ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, PUMS = நடுநிலைப் பள்ளி, GHS = அரசு உயர்நிலை, GHSS = அரசு மேல்நிலை).
  5. ஆவணம் uploadSSLC (+ HSC, TC) சேர்த்த ஒரே PDF / JPG, 1 MB-க்குள். அளவு அதிகமானால் upload ஆகாது.
  6. சரிபார்த்து Submit, கட்டணம்எல்லா விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்து Submit செய்து, காட்டப்படும் கட்டணத்தைச் செலுத்துங்கள். Payment வெற்றி பக்கத்தில் வரும் Application Reference No-ஐயும் receipt-ஐயும் சேமித்து வையுங்கள்.
  7. அடுத்த பள்ளிவேறு பள்ளியிலும் படித்திருந்தால், அந்தப் பள்ளிக்கு மீண்டும் 1–6 படிகளைச் செய்யுங்கள் (ஒரு விண்ணப்பம் = ஒரு பள்ளி).
  8. நிலை பார்த்து சான்றிதழ் downloadபள்ளி / அலுவலர் ஒப்புதல் அளித்ததும் portal-லேயே PSTM சான்றிதழை download செய்யலாம்.

அதிகம் வரும் தவறுகள்

தவறுவிளைவு / தீர்வு
எல்லாப் பள்ளிகளின் வகுப்புகளையும் ஒரே விண்ணப்பத்தில் போடுவதுநிராகரிக்கப்படும் – பள்ளிக்கு ஒரு விண்ணப்பம்.
கல்வியாண்டு தவறு (repeat செய்த வகுப்பை மறந்தது)TC-ல் உள்ள ஆண்டுகளுடன் ஒப்பிடுங்கள்; கணக்கீடு tool உதவும்.
பெயர் SSLC-லிருந்து மாறுவது (initial இடம், எழுத்து)சான்றிதழ் சரிபார்ப்பில் சிக்கல் – SSLC-ல் உள்ளபடியே தட்டச்சு.
மங்கலான / 1 MB-க்கு மேல் ஆவணம்Upload ஆகாது அல்லது திருப்பி அனுப்பப்படும் – தெளிவான colour scan, சிறிய அளவு.
🙋 இவை எல்லாம் கடினமாக இருக்கிறதா? Form நிரப்பி, SSLC photo எடுத்து அனுப்பினால் போதும் – மீதியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.PSTM – நாங்களே apply (₹60 / பள்ளி)

கேள்வி – பதில்

PSTM சான்றிதழ் ஆன்லைனில் எங்கே apply செய்வது?

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் e-Sevai portal (esevai.tnschools.gov.in)-ல் "Application for PSTM" சேவையில் விண்ணப்பிக்கலாம். உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் / கணினி மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

பல பள்ளிகளில் படித்திருந்தால் ஒரே விண்ணப்பம் போதுமா?

இல்லை. ஒரு விண்ணப்பத்தில் ஒரு பள்ளி மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஒவ்வொரு பள்ளிக்கும், அங்கு படித்த வகுப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பித்து, தனி கட்டணம் செலுத்த வேண்டும்.

எந்த ஆவணங்களை upload செய்ய வேண்டும்?

பொதுவாக SSLC மதிப்பெண் சான்றிதழ்; 11, 12-ஆம் வகுப்பு வரை கேட்டால் HSC மதிப்பெண் சான்றிதழும். TC இருந்தால் சேர்க்கலாம். எல்லாவற்றையும் சேர்த்து ஒரே PDF / JPG ஆக, 1 MB-க்குள் upload செய்ய வேண்டும்.

விண்ணப்பித்த பிறகு சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

பள்ளி / அலுவலர் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பிறகு portal-லேயே download செய்யலாம். கால அளவு பள்ளியைப் பொறுத்து மாறும்; Application Reference No வைத்து நிலையைப் பார்க்கலாம்.

பள்ளி பெயர் பட்டியலில் வரவில்லை என்றால்?

District, Block, School Type (Government / Aided) சரியாகத் தேர்வு செய்திருக்கிறீர்களா என்று பாருங்கள். பள்ளி பெயர் மாறியிருக்கலாம் அல்லது வேறு block-ல் இருக்கலாம். UDISE code தெரிந்தால் உதவும்.

⚠ இது ஒரு தனியார் இ-சேவை மையத்தின் வழிகாட்டி; அரசு இணையதளம் அல்ல. Portal-ன் திரைகளும் கட்டணமும் மாறலாம் – portal-ல் காட்டுவதையே பின்பற்றுங்கள்.

மேலும்: PSTM சான்றிதழ் – யார் தருவார்கள், விதிகள் · PSTM meaning & ஆண்டு கணக்கீடு · TN Schools e-Sevai (அதிகாரப்பூர்வ portal)

மற்ற வழிகாட்டிகள்: PSTM சான்றிதழ் · TNPSC புகைப்படம் & கையொப்பம் · இ-சேவை upload அளவு
SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery