SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

முகப்பு › வழிகாட்டிகள் › ஆதார், வாக்காளர் அட்டை, PAN – முன் & பின் ஒரே A4-ல் சரியான அளவில் Print

ஆதார், வாக்காளர் அட்டை, PAN – முன் & பின் ஒரே A4-ல் சரியான அளவில் PrintAadhaar, Voter ID, PAN – front and back on one A4 sheet at true card size

✍ SARVIN XEROX (Kaviyarasan Vaithiyanathan), L N Puram · புதுப்பிக்கப்பட்டது / Updated: 09-11-2026

In short (English): Offices and banks usually want a photocopy of both sides of an ID card on one sheet. This guide explains the standard card size (85.6 × 54 mm), how to photograph a card so that it can be auto-cropped, how to print e-Aadhaar PDFs (password: first four letters of the name in capitals plus year of birth), and printer settings that keep the card at true size.

வங்கி, பள்ளி, அலுவலகங்களில் "ஆதார் xerox, முன்னும் பின்னும் ஒரே பக்கத்தில்" என்று கேட்பது வழக்கம். கடைக்கு வர முடியாதவர்கள் அட்டையின் photo-வை WhatsApp-ல் அனுப்புவார்கள் – அதை அப்படியே print செய்தால் அட்டை பெரிதாக, சாய்வாக, பின்னணி மேசையுடன் வரும். அதைச் சரியாக்க வழி இதோ.

1. அட்டையின் உண்மையான அளவு

ஆதார் PVC, வாக்காளர் அட்டை (EPIC), PAN, ஓட்டுநர் உரிமம், ATM அட்டை – இவை அனைத்தும் சர்வதேச ID-1 அளவு: 85.6 mm × 54 mm. Print-லும் இதே அளவில் வந்தால்தான் "original size xerox" போலத் தெரியும். நம் ID Print tool இந்த அளவிலேயே வைக்கிறது.

2. அட்டையை photo எடுப்பது எப்படி?

3. e-Aadhaar PDF

UIDAI இணையதளம் / mAadhaar-ல் download செய்த e-Aadhaar PDF-க்கு password உண்டு: பெயரின் முதல் 4 எழுத்துகள் CAPITAL-ல் + பிறந்த ஆண்டு (உதா: பெயர் KAVYA, பிறந்த ஆண்டு 2004 என்றால் KAVY2004). PDF-ஐ tool-ல் போட்டால் password கேட்கும்; அதன் பிறகு அட்டைப் பகுதியை மட்டும் எடுத்து முன் / பின் பக்கமாக அடுக்கலாம், அல்லது முழு PDF-ஐ A4-ல் அப்படியே print செய்யலாம்.

4. Printer அமைப்புகள்

5. பாதுகாப்பு

ஆதார் போன்ற ஆவணங்களை யாரிடமும் upload செய்ய வேண்டாம். நம் tool உங்கள் browser-லேயே படத்தைச் செயலாக்குகிறது; எந்த file-உம் server-க்குப் போவதில்லை. தேவையில்லாத இடங்களுக்கு "Masked Aadhaar" (முதல் 8 இலக்கம் மறைக்கப்பட்டது) கொடுப்பது பாதுகாப்பானது.

⚡ இலவசம், Login தேவையில்லை:ID Card Print (Front & Back)

கேள்வி – பதில்

ஒரே தாளில் இரண்டு பேரின் ஆதார் போடலாமா?

ஆம். நான்கு படங்களையும் (இருவரின் முன், பின்) சேர்த்தால் ஒரே A4-ல் அடுக்கும்.

Print-ல் அட்டை பெரிதாக வருகிறதே?

Printer dialog-ல் "Fit to page" அணைத்து "Actual size / 100%" தேர்ந்தெடுங்கள்.

PDF-க்கு password தெரியவில்லை?

பெயரின் முதல் 4 எழுத்து (ஆதாரில் உள்ளபடி, CAPITAL) + பிறந்த ஆண்டு. பெயர் 4 எழுத்துக்குக் குறைவாக இருந்தால் முழுப் பெயர் + ஆண்டு.

அதிகாரப்பூர்வ தகவல்: UIDAI – ஆதார் அதிகாரப்பூர்வ இணையதளம்

மற்ற வழிகாட்டிகள்: மின் இணைப்பு பெயர் மாற்றம் · TNPSC புகைப்படம் & கையொப்பம் · PSTM சான்றிதழ் · பட்டா மாற்றம் · சாதி, வருமான, இருப்பிட சான்றிதழ் · புதிய மின் இணைப்பு · முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு (CMCHIS) அட்டை · இ-சேவை upload அளவுகள் · JEE Main photo & signature · RRB கையொப்பம் 140×60 · Passport size photo print · மின் Tariff மாற்றம் · திருமண bio-data

⚠ இது அரசு இணையதளம் அல்ல. தகவல்கள் எங்கள் கடை அனுபவம், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் அடிப்படையில் வழிகாட்டலுக்காக மட்டும்; விதிகள் மாறலாம் – இறுதியாக அதிகாரப்பூர்வ இணையதளத்தைச் சரிபாருங்கள். Disclaimer

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery