JEE Main / NTA புகைப்படம், கையொப்பம், 10-ம் வகுப்பு PDF – சரியான அளவுJEE Main / NTA photo, signature and Class 10 PDF – exact sizes and common mistakes
JEE Main விண்ணப்பத்தில் பதிவு, கட்டணம் முடிந்த பிறகு வரும் Document Upload பக்கத்தில் மூன்று கோப்புகள் கேட்கப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் தனி format, KB அளவு உண்டு. அளவு மீறினால் அந்தப் பக்கமே file-ஐ ஏற்காது; அளவு சரியாக இருந்தும் முகம் சிறியதாக, பின்னணி கருமையாக இருந்தால் பின்னர் NTA சரிபார்ப்பில் சிக்கல் வரலாம். எங்கள் கடையில் தினமும் இந்த வேலை செய்யும் அனுபவத்திலிருந்து இந்த வழிகாட்டி.
1. NTA கேட்கும் அளவுகள் (JEE Main 2027)
| File | Format & அளவு | குறிப்பு |
|---|---|---|
| புகைப்படம் (Photograph) | JPG, 10–200 KB | முகம் ~80% இடம், mask இல்லாமல், காதுகள் தெரிய, வெள்ளை பின்னணி |
| கையொப்பம் (Signature) | JPG, 10–100 KB · அகலம் 200–450 px, உயரம் 50–200 px | வெள்ளைத் தாளில், கருப்பு / நீல மையில் |
| 10-ம் வகுப்பு சான்றிதழ் | PDF, 50–300 KB | முழுப் பக்கம் தெளிவாக; பல பக்கம் என்றால் ஒரே PDF |
2. "80% முகம்" என்றால் என்ன?
Passport அளவு photo-வில் பொதுவாக முகம் பாதி இடம்தான் இருக்கும்; தோள், சட்டை அதிகம் தெரியும். NTA கேட்பது தலை (முடி மேல் பகுதி முதல் தாடை வரை) photo உயரத்தில் சுமார் 80% இருக்க வேண்டும் என்பது. அதாவது photo-வை நெருக்கமாக crop செய்ய வேண்டும். இரண்டு காதுகளும் தெரிய வேண்டும்; கண்ணாடி அணிந்தால் கண்கள் பளபளப்பு இல்லாமல் தெரிய வேண்டும். தொப்பி, mask, கருப்புக் கண்ணாடி கூடாது.
3. புகைப்படம் எடுப்பது எப்படி?
- வெற்றுச் சுவர் முன்: வெள்ளை அல்லது வெளிர் நிறச் சுவர் முன் நின்று எடுங்கள். எங்கள் tool பின்னணியைத் தானாக வெள்ளையாக்கும், ஆனால் முடி ஓரங்கள் சுத்தமாக வர வெற்றுச் சுவர் உதவும்.
- முன்பக்க வெளிச்சம்: ஜன்னல் வெளிச்சம் முகத்தின் மீது படட்டும்; பின்னால் வெளிச்சம் இருந்தால் முகம் கருப்பாகும்.
- நேராகப் பாருங்கள்: கேமரா கண் உயரத்தில்; தலை சாயாமல், வாய் மூடி, இயல்பான முகம்.
- Selfie வேண்டாம்: கை நீட்டி எடுத்தால் முகம் சிதையும்; வேறொருவர் 1 மீட்டர் தூரத்திலிருந்து எடுக்கட்டும். கணினியில் webcam இருந்தால் நம் tool-லேயே நேரடியாக எடுக்கலாம்.
4. கையொப்பம்
வெள்ளை A4 தாளில், கருப்பு அல்லது நீல ball-point / gel pen-ல், வழக்கமாகப் போடும் கையொப்பத்தையே பெரிதாகப் போடுங்கள். CAPITAL எழுத்தில் பெயர் எழுதுவது கையொப்பம் அல்ல – இது பல தேர்வுகளில் நிராகரிப்புக்குக் காரணம். பிறகு photo எடுத்து tool-ல் போட்டால் தாளின் சாம்பல் நிறம், நிழல் நீங்கி தூய வெள்ளை பின்னணியில் மை மட்டும் வரும்; அகலம் 400, உயரம் 130 px போன்ற NTA வரம்புக்குள் அமையும்.
5. 10-ம் வகுப்பு சான்றிதழ் PDF
Marksheet-ஐ மேசையில் தட்டையாக வைத்து மேலிருந்து photo எடுங்கள் அல்லது scan செய்யுங்கள். DigiLocker-ல் இருந்து download செய்த PDF இருந்தால் அதையே பயன்படுத்தலாம். PDF 300 KB-ஐ விடப் பெரிதாக இருந்தால் நம் tool பக்கங்களைத் தெளிவு குறையாமல் சுருக்கும்; 50 KB-க்குக் கீழே இருந்தால் குறைந்தபட்ச அளவுக்கு உயர்த்தும். முன்னும் பின்னும் இருந்தால் இரண்டு படத்தையும் சேர்த்து ஒரே PDF ஆக்குங்கள்.
6. அடிக்கடி வரும் பிழைகள்
- File 10 KB-க்குக் கீழ்: WhatsApp வழியாக வந்த photo அதிகம் சுருங்கியிருக்கும்; அசல் photo-வைப் பயன்படுத்துங்கள்.
- PNG / HEIC format: JPG மட்டுமே ஏற்கப்படும். நம் tool எப்போதும் JPG-ஆகவே தரும்.
- முகம் சிறியதாக: முழு உடல் / அரை உடல் photo-வை அப்படியே போடுவது. 80% விதிக்கு நெருக்கமாக crop தேவை.
- பழைய photo: சமீபத்திய (recent) photo கேட்கப்படுகிறது; தேர்வு நாளில் admit card photo-வோடு முகம் ஒப்பிடப்படும்.
கேள்வி – பதில்
JEE photo-வில் பெயர், தேதி எழுத வேண்டுமா?
JEE Main 2027 upload பக்கம் அப்படிக் கேட்கவில்லை; அதனால் நம் JEE tool பெயர் பட்டை இல்லாமல் தரும். TNPSC-க்குத்தான் பெயர் & தேதி தேவை – அதற்குத் தனி tool உள்ளது.
NEET, CUET-க்கும் இதே tool போதுமா?
ஆம். அவையும் NTA தேர்வுகள்; அளவுகள் சிறிது மாறலாம். Upload பக்கத்தில் காட்டும் KB / px-ஐ "அளவு அமைப்புகள்"-ல் மாற்றிப் பயன்படுத்துங்கள்.
என் photo எங்காவது சேமிக்கப்படுமா?
இல்லை. அனைத்தும் உங்கள் கணினி / கைபேசியின் browser-லேயே நடக்கிறது; எந்த படமும் எங்கள் server-க்கு அனுப்பப்படுவதில்லை.
அதிகாரப்பூர்வ தகவல்: JEE Main – NTA அதிகாரப்பூர்வ இணையதளம்