SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

முகப்பு › வழிகாட்டிகள் › முதல் பட்டதாரி சான்றிதழ்

முதல் பட்டதாரி சான்றிதழ் – தகுதி, ஆவணங்கள், விண்ணப்பம்First graduate certificate in Tamil Nadu: eligibility, documents and how to apply

✍ SARVIN XEROX (Kaviyarasan Vaithiyanathan), L N Puram · புதுப்பிக்கப்பட்டது / Updated: 23-11-2026

In short (English): A first graduate certificate says that nobody in the applicant's family has graduated before. It is applied for through Tamil Nadu e-Sevai (online or at a centre) with the applicant's and parents' school records and a self-declaration, and is used for fee concessions in college admission.

குடும்பத்தில் முதல் முறையாக கல்லூரிப் படிப்பு (பட்டப்படிப்பு) படிக்கப் போகும் மாணவர்களுக்கு வழங்கப்படுவது முதல் பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate). பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில்முறைப் படிப்புகளின் சேர்க்கையில் கல்விக் கட்டணச் சலுகை போன்ற பயன்களுக்கு இது கேட்கப்படுகிறது.

1. யாருக்குத் தகுதி?

2. தேவைப்படும் ஆவணங்கள் (பொதுவாக)

ஆவணம்குறிப்பு
விண்ணப்பதாரர் புகைப்படம்சமீபத்திய passport அளவு
விண்ணப்பதாரரின் TC / மதிப்பெண் சான்றிதழ்பள்ளிப் படிப்புச் சான்று
தந்தை, தாயின் TC / கல்விச் சான்றுஇல்லையெனில் உறுதிமொழியில் குறிப்பிடவும்
முகவரிச் சான்று / குடும்ப அட்டைகுடும்ப உறுப்பினர்களைக் காட்ட
சுய உறுதிமொழி"முதல் பட்டதாரி" வகையில் தயாரிக்கலாம்

3. விண்ணப்பிக்கும் முறை

  1. ஆவணங்களை scan செய்து portal அளவுக்குள் PDF ஆக்குங்கள் – TNeGA tools.
  2. இ-சேவை portal / மையத்தில் "முதல் பட்டதாரி சான்றிதழ்" சேவையைத் தேர்வு செய்யுங்கள். CAN பதிவு இருந்தால் விவரங்கள் தானாக வரும்; இல்லையெனில் முதலில் CAN பதிவு.
  3. விண்ணப்பதாரர், பெற்றோர், உடன்பிறந்தோர் கல்வி விவரம், முகவரி நிரப்புங்கள்.
  4. ஆவணங்களை upload செய்து கட்டணம் செலுத்தி, ஒப்புகையைச் சேமித்து வையுங்கள்.
  5. VAO / RI விசாரணைக்குப் பின் வட்டாட்சியர் அலுவலகம் வழியாகச் சான்றிதழ் வழங்கப்படும்; online-ல் download செய்யலாம்.

4. கவனிக்க வேண்டியவை

🏪 விண்ணப்பிக்க உதவி வேண்டுமா?WhatsApp – SARVIN E-SEVAI

கேள்வி – பதில்

அண்ணன் / அக்கா பட்டம் பெற்றிருந்தால் தகுதி உண்டா?

பொதுவாக இல்லை – குடும்பத்தில் (உடன்பிறந்தோர் உட்பட) யாரும் பட்டம் பெறாதவர்களுக்கே. விதிகளை அந்தந்த சேர்க்கை அறிவிப்பில் சரிபாருங்கள்.

பெற்றோருக்கு TC இல்லை – என்ன செய்வது?

பெற்றோர் பள்ளிக்கே செல்லவில்லை என்றால் அதைச் சுய உறுதிமொழியில் குறிப்பிடலாம்; VAO விசாரணையில் உறுதி செய்யப்படும்.

எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

கல்லூரி சேர்க்கை / counselling தொடங்கும் முன்பே – கடைசி நேரத்தில் விசாரணைத் தாமதத்தால் சிக்கல் வரலாம்.

⚠ இது பொதுத் தகவல் மட்டும். தகுதி விதிகள், சலுகைகள், கட்டணம் சேர்க்கை அறிவிப்பு / அரசு உத்தரவைப் பொறுத்து மாறலாம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபாருங்கள்.

அதிகாரப்பூர்வ தகவல்: TN e-Sevai

மற்ற வழிகாட்டிகள்: வில்லங்கச் சான்றிதழ் (EC) · வாரிசுச் சான்றிதழ் · குடும்ப அட்டை (Smart card) சேவைகள் · ஆதார் முகவரி மாற்றம் · முதல் பட்டதாரி சான்றிதழ் · பட்டா மாற்றம் · மின் இணைப்பு பெயர் மாற்றம் · இ-சேவை upload: Photo 50 KB, PDF 200 KB · TNPSC புகைப்படம் & கையொப்பம் · PSTM சான்றிதழ் · சாதி, வருமான, இருப்பிட சான்றிதழ் · புதிய மின் இணைப்பு · முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு (CMCHIS) அட்டை · எல்லாம் → · JEE Main photo & signature · RRB கையொப்பம் 140×60 · ID அட்டை முன் & பின் print · Passport size photo print · மின் Tariff மாற்றம் · திருமண bio-data
SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery · Disclaimer
இது அரசு இணையதளம் அல்ல – தனியார் கடையின் இணையதளம். Not a government website.